Thursday, November 15, 2012

எங்கே?


விழிகள் பேசும் வேளையில்
உன் காது மடல்கள்
சிவக்கும் நாணம் எங்கே?

ஏதோ சந்தர்ப்பத்தில்
உன் சுவாசத்தை வாசிக்கும் போது
உன் கால்களிட்ட கோலம் எங்கே?

சந்தைக்கடை சத்தத்திலும்
என் காதுகளுக்கு எட்டும்
கொலுசொலி எங்கே?

படபடக்கும் இமைத்துடிப்புடன்
எனை சுண்டி இழுக்கும்
கண்மைக் கீற்று எங்கே?

பிள்ளையாரைப் பார்க்கவும்
துணை தேடும்
உன் பயம் எங்கே?

நித்தமும் தரிசித்தாலும்
அழகாவதற்காகவே அணிந்துவரும்
தாவணி எங்கே?

அழுந்தச் சீவி
அடுக்கடுக்காய் பின்னழிட்டு
பூச்சரமிட்ட கூந்தல் எங்கே?

தெரிந்தவரே வந்திருப்பினும்
அம்மாவை வாசலுக்கு அனுப்பும்
அடக்கம் எங்கே?

அட பாரதியே.....
புதுமை என்ற பெயரில்
பெண்மையை இழக்கிறோமே...

காதல் தோல்வி காதலில் தோல்வி
ஏன் காதலே இனி இல்லை
ஆம்
காதல் துளிர்ப்பது பெண்மையில் மட்டுமே..


Monday, January 30, 2012

தாய்மையே வெல்லும்

பட்டு பீதாம்பரத்திலும்
பரம சுகத்திலும்
பேரானந்தப் பெருநிலையிலும்
மீண்டு வராத தூக்கம்

பசி மறந்து
இடம் அறியாது
தாயின் அரவணைப்பில்
மீண்டு விடுகிறது

உணர்ச்சிகளையும்
உணர்வுகளையும்
தாய்மை வென்றுவிடுகிறது.....